கனடாவில் விருது பெற்ற இலங்கை தமிழ் மருத்துவர்!

0
498

2022-ஆம் ஆண்டின் சிறந்த 25 கனேடிய புலம்பெயர்ந்தவர்களில் (Top 25 Canadian immigrants of 2022) இரண்டு இலங்கை வம்சாவளி கனேடியர்களான பேராசிரியர் ஜானக ருவன்புர மற்றும் மருத்துவர் சிவகுமார் குலசிங்கம் ஆகியோர் விருதை பெற்றனர்.

குறித்த விருது பெற்ற இலங்கை வம்சாவளியினரில் டாக்டர் சிவகுமார் குலசிங்கம் தமிழர் ஆவார்.

  புலம்பெயர்வு

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டதாரியான சிவகுமார் குலசிங்கம் (Dr. Sivakumar Gulasingam) இலங்கையிலுள்ள National Rehabilitation Hospital மருத்துவமனையில் முன்னணி மருத்துவராக இருந்தவர் ஆவார். முன்னணி மருத்துவராக இருந்த அவர், 2008-ஆம் ஆண்டு கனடாவிற்கு புலம்பெயர்ந்தார்.

கனடாவில் மருத்துவத் தொழில் செய்வதற்கான உரிமம் பெறுவதற்கு அவர் கடினமாக உழைத்துள்ளார். பல தடைகளைத் தாண்டி, இன்று University Health Network என்னும் மருத்துவமனைகள் அமைப்பில் மருத்துவராகவும், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகவும்  மருத்துவர் சிவகுமார் குலசிங்கம்  (Dr. Sivakumar Gulasingam)பணியாற்றி  வருகிறார்.

அதேவேளை ஏற்கெனவே, டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மருத்துவத்தில் மனிதநேயத்திற்கான மைக்கேல் கார்டன் விருது மற்றும் ஆண்டின் மிகச் சிறந்த இளைஞர்கள் – மனிதாபிமான மற்றும் தன்னார்வ சேவைகள் உட்பட பல மதிப்புமிக்க விருதுகளை டாக்டர் குலசிங்கம் பெற்றுள்ளார்.

பேராசிரியர் ருவன்புரா 

அதேசமயம் பேராசிரியர் ருவன்புரா (Janaka Ruwanpura) கட்டுமானப் பொறியியலில் அறிஞரும் விருது பெற்ற கல்வியாளரும் ஆவார். அவர் Calgary பல்கலைக்கழகத்தில் துணை-ஆய்வாளர் மற்றும் இணை துணைத் தலைவர் (ஆராய்ச்சி/சர்வதேசம்) மற்றும் பொறியியல் பேராசிரியராக உள்ளார்.

பேராசிரியர் ருவன்புரா தனது கல்விசார் சாதனைகள், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக சர்வதேச, தேசிய, மாகாண மற்றும் நகராட்சி விருதுகளை வென்றுள்ளார். சிறந்த முன்னாள் மாணவர் விருது (அரிசோனா மாநில பல்கலைக்கழகம்), இலங்கை அறக்கட்டளையின் (லாஸ் ஏஞ்சல்ஸ்) வாழ்நாள் சாதனை விருது மற்றும் கால்கேரியின் சர்வதேச சாதனைகள் ஆகியவை அவர் சமீபத்தில் பெற்ற சில விருதுகளில் அடங்கும்.

கனடாவில்  விருது பெற்ற  இலங்கைத் தமிழ் மருத்துவர்! | Award Winning Sri Lankan Tamil Doctor In Canada

கனேடிய புலம்பெயர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது சாதனைகளை கொண்டாடும் விதமாக Top 25 Canadian immigrants விருதுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது.

மேலும் ரொறன்ரோவில் நடைபெற்ற Canadian Immigrant பத்திரிக்கை நடத்திய இந்த வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்னவும் கலந்துகொண்டார்.