50 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் குழு!

0
564

நடிகை சாஷின் லிட்டில்ஃபெதரிடம் (Sacheen Littlefeather) 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்கர் குழு மன்னிப்புக் கேட்டுள்ளது. கடந்த 1973 ஆம் ஆண்டு காட்ஃபாதர் படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது நடிகர் மார்லன் பிராண்டோவிற்கு (Marlon Brando) அறிவிக்கப்பட்டது.

ஆனால் நடிகர் மார்லன் பிராண்டோ ( Marlon Brando) தனக்கு பதிலாக அமெரிக்க பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த நடிகை சாஷின் லிட்டில் ஃபெதர் (Sacheen Littlefeather) என்பவரை அனுப்பி வைத்தார்.

மேடையேறிய சாஷின் (Sacheen Littlefeather) அமெரிக்க பூர்வ குடிகளை ஹாலிவுட் திரையுலகம் புறக்கணிப்பதாகவும் அதன் காரணமாக மார்லன் பிராண்டோ ( Marlon Brando) இந்த விருதை ஏற்க முடியாது எனக் கூறியதாகவும் அவரது கடிதத்தை வாசித்தார்.

மேலும் ஹாலிவுட் திரையுலகம் தொடர்ச்சியாக அமெரிக்க பூர்வகுடிகளைத் தவறாக சித்திரிப்பதாகவும் தெரிவித்தார். இது அன்றைய காலகட்டத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக நடிகை சாஷினுக்கு (Sacheen Littlefeather) வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தற்போது சாஷினுக்கு (Sacheen Littlefeather) 75 வயதாகிறது.

இந்த நிலையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு சாஷின் (Sacheen Littlefeather) அடைந்த இழப்புக்காக ஆஸ்கர் குழு அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு பின்னர்  மன்னிப்புக் கேட்ட ஆஸ்கர்! | Oscar Apologizes After50 Years