கடல் வாழ் உயிரினங்களுக்கும் கொரோனா சோதனை செய்யும் சீனா!

0
488

சீனாவின் ஜியாமெனில் ‘கொவிட்-19’ வைரஸ் பரவி வருவதால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மட்டுமின்றி அவர்கள் கொண்டு வரும் மீன்களுக்கும் ‘கொவிட்-19’ பாதிப்பு உள்ளதா என பி.சி.ஆர். சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 ஜியாமென் என்பது சீனாவின் கடற்கரை நகரமாகும். இந்த நகரத்தில் இருந்து 40 பேர் ‘கொவிட் 19’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் வாழ் உயிரினங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் நாடு! | Corona Test For Sea Creatures In China

பரிசோதனை

இதனையடுத்து, நகரத்தில் வசிக்கும் 5 மில்லியன் மக்களும் ‘கொவிட் 19’ பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

சுகாதார அதிகாரிகள் மீன்களுக்கு மட்டுமல்ல, மீனவர்கள் பிடித்து கரைக்குக் கொண்டு வரும் கணவாய் மற்றும் நண்டுகள் உட்பட பிற கடல்வாழ் உயிரினங்களுக்கும் பி.சி.ஆர். செய்தனர்.

அது குறித்த காணொளிக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.