தன்னை தானே வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் நபர்!

0
622

ஜப்பான் தலை நகர் டோக்கியோவைச் சேர்ந்த 38 வயது நபர் ஷோஜி மேரிமோட்டோ (Shoji Marimoto). இவர் விநோதமாக தன்னையே வாடகைக்கு விட்டும் பணம் சம்பாதிக்கிறார்.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்திருக்கிறார் ஷோஜி (Shoji Marimoto). ஆனால் அவருக்கு அது கசப்பான ஒன்றாக இருந்திருக்கிறது.

இதனால் 2018ஆம் ஆண்டு தனது தொழிலை மாற்ற நினைத்தவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தனது புதிய தொழில் குறித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்தவர். “கடைக்குப் போக ஆள் தேவை, விளையாடுவதற்கு ஆள் தேவை எனில் என்னை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். கடினமான வேலைகளை செய்ய மாட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

இதிலிருந்து ஷோஜிக்கு (Shoji Marimoto) சில அழைப்புகளும் வர மக்களுடன் நேரம் செலவழித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கத் தொடங்கியிருக்கிறார்.

“கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் தனிமை காரணமாக 3000க்கும் மேற்பட்ட மக்கள் தற்கொலை செய்துள்ளனர். மக்களின் தனிமையில் இருந்து அவர்களை காக்க என்னை நானே வாடகைக்கு விட தொடங்கிவிட்டேன்.” என்று கூறியுள்ளார் ஷோஜி (Shoji Marimoto).

இப்போது டோக்கியோ முழுவதும் பிரபலமாக இருக்கும் இவரை மக்கள் “மிஸ்டர் வாடகை” என்றே அழைக்கிறார்களாம். “தனியார் நிறுவனங்களில் வேலை செய்த போது அதிகாரிகள், முதலாளிகள் அடக்குமுறையால் தவித்தேன். இப்போது நான் சுதந்திரமாக உணர்கிறேன்”. என்றார் ஷோஜி (Shoji Marimoto)

இதுவரை தன்னை ஆயிரம் பேருக்கு மேல் தன்னை உதவிக்கு அழைத்துள்ளதாகவும் அதில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும் கூறிகிறார் ஷோஜி (Shoji Marimoto).

“வீட்டை சுத்தம் செய்யவோ அல்லது பொருட்களை தூக்கவோ யாராவது அழைத்தால் நான் செல்ல மாட்டேன். தகாத ரீதியான அழைப்புகளையும் நிராகரித்துவிடுவேன்.

மக்களுடன் பொழுதைக் கழிப்பது மட்டுமே என்னுடைய வேலை” என்கிறார் ஷோஜி (Shoji Marimoto). தன்னிடம் மனக் குறைகளை கூறுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆறுதல் பெறுவதாக கூறுகிறார் ஷோஜி மேரிமோட்டோ (Shoji Marimoto) தெரிவித்துள்ளார்.