இலங்கை மீண்டும் இருளில் மூழ்குமா?

0
600

நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் இலங்கையில் 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிலக்கரி இருப்புகளை கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

மீண்டும் இருளில் மூழ்குமா இலங்கை! | Will Sri Lanka Sink Into Darkness Again

அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக இந்த நாட்களில் மின்சார உற்பத்தி பெரும்பாலும் நீர் மின்சாரம் மற்றும் நிலக்கரி மூலம் மேற்கொள்ளப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.

Janaka Ratnayake

எனினும், இது டிசம்பரில் செய்யப்பட வேண்டும் என்றும் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை மட்டுமே நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.