கண்ணீரால் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க தலைமை அதிகாரி!

0
459

அமெரிக்காவில் ஊழியர்கள் சிலரை ஆட்குறைப்புச் செய்த பின் கண்ணீர் வடிக்கும் படத்தைப் பதிவேற்றம் செய்த தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் இணைய வழி விளம்பரச் சேவைகளை வழங்கும் HyperSocial and HyperSphere நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரேடன் வாலேக் (Braden Wallake) பணியாற்றுகிறார். அவர் இரண்டு ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்ததாகக் கூறப்படுகிறது.

அதோடு “நான் ஊழியர்கள் சிலரை மட்டும்தான் ஆட்குறைப்புச் செய்யவேண்டியிருந்தது. கடந்த சில வாரங்களாகச் சில நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்வதைப் பார்த்தேன். பெரும்பாலானவை பொருளியல் சம்பந்தமாக அமைந்தன. எங்களுடையது? என் தவறு” என அவர் LinkedIn-இல் பதிவிட்டார்.

இவ்வாண்டுத் தொடக்கத்தில் தாம் எடுத்த தவறான முடிவால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதாக தெரிவித்து தாம் கண்ணீர் வடிப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்றையும் பிரேடன் வாலேக் (Braden Wallake) பதிவேற்றம் செய்தார்.

அதோடு தலைமை நிர்வாக அதிகாரிகள் அனைவரும் அனுதாபம் இல்லாதவர்கள் அல்லர் என்பதைக் காட்டவும் அவ்வாறு செய்ததாக அவர் கூறினார். இந்நிலையில் அவரது பதிவு பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் செயலுக்குப் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கண்ணீர் வடித்ததால் சர்சையில் சிக்கிய தலைமை அதிகாரி! | Chief Officer Caught Because He Shed Tears Us

“நீங்கள் ஆட்குறைப்புக்கு ஆளானோரைவிட மோசமான நிலையில் இருப்பதாக எண்ணுகிறீர்களா? மற்றவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கிறீர்கள் என்றும் சிலர் கருத்துரைத்தனர்.

மேலும் கண்ணீர் வடிக்கும் படத்தைப் பதிவேற்றம் செய்வதற்குப் பதிலாக, வேலை இழந்த ஊழியர்களுக்கு புதிய வேலை தேடிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுவது சிறந்தது என்றும் சிலர் கூறினர். இதை அடுத்து, நிர்வாக அதிகாரியான பிரேடன் வாலேக் (Braden Wallake) ஆட்குறைப்புச் செய்யப்பட்ட ஊழியர்களை மற்ற வேலைகளுக்குப் பரிந்துரைக்கத் தொடங்கியுள்ளாராம்.