மக்கள் பாராட்டு மழையில் நனையும் எரிசக்தி அமைச்சர்!

0
267

அண்மைய நாட்களில் எரிபொருட்துறை அமைச்சரைத் திட்டாத இலங்கையர்கள் யாரும் இருந்திருக்க முடியாது. ஆனால் இப்போது பெற்றோல் பதுக்கல்காரர்களைத் தவிர அனைவரும் அவரைப் பாராட்டுகின்றனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மட்டுப்படுத்தப்பட்ட சீரான எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பதுடன் இலத்திரனியல் முறைமைக்கு எரிபொருள் வழங்கலை மாற்றியமைத்து ஒரே வாரத்தில் எரிபொருளுக்கான வரிசைகளை கணிசமான அளவுக்கு நாட்டில் குறைத்துள்ளார்.

மக்களின் பாராட்டு மழையில் நனையும் அமைச்சர்! | Minister Is Soaking Rain Of People S Praise

முன்னரும் கூட இப்போது வழங்கப்படும் அளவுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்ட போதிலும் பதுக்கல் மற்றும் ஊழல் காரணமாக அனைவருக்கும் பங்கீடு செய்வதில் கடுமையான நெருக்கடிகள் இருந்தன.

ஆனால் இப்போது அனைவருக்கும் ஓரளவுக்கு எரிபொருள் கிடைக்கக் காரணம் இந்த இலத்திரனியல் (QR கோட்) முறைமை தான்.

மக்களின் பாராட்டு மழையில் நனையும் அமைச்சர்! | Minister Is Soaking Rain Of People S Praise

ஓரளவுக்கு வெற்றியளித்துள்ள இந்த முறைமையில் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவைச் சற்று அதிகரித்து, இன்னும் சில வசதிகளை மேம்படுத்தினால் இது மிகவும் வெற்றிகரமான முறைமை என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.