தைவான் பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஓட்டல் அறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு

0
414

தைவான் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் (Oh Yang Li-hsing) இன்று காலை ஓட்டல் அறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ யாங் லி-ஹ்சிங் (Oh Yang Li-hsing)  மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு இதய நோய் இருந்ததாகவும் இதயத்தில் ஸ்டென்ட் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தைவான் பாதுகாப்பு அமைச்சக  அதிகாரி ஓட்டல் அறையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு | Taiwan Defense Ministry Vice Chief Dead In Hotel

இந்த நிலையில் அவர் (Oh Yang Li-hsing) தனிப்பட்ட வேலைகளுக்காக தெற்கு தைவான் சென்று ஒட்டலில் அறையெடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு இன்று அதிகாலை திடீர் நெஞ்சு வலி எற்பட்டதாக தெரிகிறதாகவும் அவர் (Oh Yang Li-hsing) அருகே யாருமில்லாததால் அவர் போராடி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது

57 வயதான யாங் (Oh Yang Li-hsing) மாரடைப்பால் தான் இறந்தார் என்றும் அவர் தங்கியிருந்ததாகவும் ஓட்டல் அறையில் எந்த விதமான ‘ஊடுருவல்’ இருந்ததற்கான அறிகுறியும் இல்லை எனவும் ஆகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.