ரஷ்யா – உக்ரைன் போருக்கு நடுவே இந்து முறைப்படி இணைந்த காதல் ஜோடி!

0
142

ரஷ்யா உக்ரைன் போருக்கு நடுவே காதல் ஜோடி இந்து சமய முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த சிர்கி நோவிகோவும் (Sergei Novikov) உக்ரைனைச் சேர்ந்த எலோனா பிரோமோகாவும் (Elona Bramoka) காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக தங்கியிருந்த இந்த காதல் ஜோடி வடஇந்திய பாரம்பரிய உடைகளை உடுத்தி கடந்த 2ம் திகதி இந்து சமய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.