விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் தற்கொலை!

0
241

அம்பாறை- ஹிங்குரான நகருக்கு அண்மையில் விடுதியொன்றில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகியஸ் சின்கர் என்ற ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 51 வயதான நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி விடுதியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவர் ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு அம்பாறை பிரதேசத்திலுள்ள ஹிங்குரான நகருக்கு வந்து சுமார் இரண்டு மாத காலம் தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகின்றது.

விடுதியில் தங்கியிருந்த  வெளிநாட்டு பிரஜை தற்கொலை | Foreign National Staying Hotel Committed Suicide

இந்நிலையில் இம்முறை இலங்கை வந்த அவர் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஹிங்குரான பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளார். அத்துடன் அவர் மனைவியை விவாகரத்து செய்தவர் என்றும் இவர் இரு புதல்விகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.