மிஸ் குப்பை என்று கிண்­ட­ல­டிக்­கப்­பட்­ட இளம் பெண்; மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார்!

0
529

தாய்லாந்தில் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்ததால் ‘மிஸ் குப்பை’ என விமர்­சிக்­கப்­பட்ட யுவ­தி­யொ­ருவர் மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து பட்­டத்தை வென்­றுள்ள சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

1998 ஆம் ஆண்டு பேங்கொக் நகரில் பிறந்­தவர் அனா சுவேன்கம் (Anna Suengam). வறிய குடும்­பத்தைச் சேர்ந்­தவர் இவர். அனாவின் சுவேன்­காமின் ( Anna Suengam) தாய் முன்னர் குப்பை அகற்றும் ஊழி­ய­ராக பணி­யாற்­றி­யவர்.

இதனால் அனா பாட­சாலை மாண­வி­யாக இருந்­த­போது அவரை ( Anna Suengam) ‘மிஸ் குப்பை’ என சகாக்கள் கிண்­ட­ல­டித்­தனர்.

இந்­நி­லையில், கடந்த சனிக்­கி­ழமை இரவு நடை­பெற்ற மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து இறுதிச் சுற்றில் 23 வய­தான அனா சுவேன்கம் இயாம் ( Anna Suengam) முத­லிடம் பெற்றார்.

மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து 2022 அழ­கு­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்­டுள்ள அவர் எதிர்­வரும் மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ராணி போட்­டியில் தாய்­லாந்து சார்­பாக பங்காற்றியுள்ளார்.

மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து போட்­டி­யின் ­போது பார்­வை­யா­ளர்கள் மத்­தி­யிலும் அனா சுவான்கம் ( Anna Suengam) பிர­ப­ல­மாக இல்லை. இப்­போட்­டிக்­கான உத்­தி­யோ­க­பூர்வ இணை­யத்­த­ளத்தில் நடத்­தப்பட பொது­மக்­களின் வாக்­க­ளிப்பில் 3.2 சத­வீ­தத்­தையே அவர் பெற்­றி­ருந்தார்.

தாய்­லாந்து இத்­தா­லியக் கலப்­பு­டைய வெரோ­னிக்கா பகோனா 28.1 சத­வீத வாக்­கு­க­ளையும் தாய்­லாந்து அமெ­ரிக்க கலப்­புயை நிகோலின் லிம்ஸ்­னுகன் 25.2 சத­வீத வாக்­கு­க­ளையும் பெற்­றி­ருந்­தனர்.

அதேவேளை வெளி­நாட்டுப் பெற்றோர் ஒரு­வரை கொண்­டி­ருக்­கா­தவர் என்­பதால் அனா சுவேன்கம் (Anna Suengam) இப்­போட்­டியில் வெற்றி பெற முடி­யாது என இப்­போட்­டிக்கு முன்னர் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பலர் கூறி­ய நிலையில் மிஸ் யூனிவர்ஸ் தாய்­லாந்து பட்­டத்தை அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.