யாழில் இரு வாலிபர்கள் நாயை கை கோடரியால் கொன்ற சம்பவம் பரபரப்பு!

0
403

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைத் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நாய் ஒன்றை கைக் கோடாரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் நாயின் 4 கால்களை வெட்டிய பின்னர் அதனை இழுத்துச் சென்று கை கோடாரியால் நாயின் முகத்தை முற்றாக வெட்டி சிதைத்து தூஷண வார்த்தைகள் பேசும் வீடியோ ஒன்று எடுத்துள்ளார்கள்.

மேலும் நாயை வெட்டிக் கொல்லும் போது குறித்த நபர்கள் தாமே அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள நிலையில் சந்தேக நபர்களான பாலகிஸ்ணன், பாலசுதர்சன் ஆகியோரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.