யாழில் இன்று காலை கார் – மோட்டார் சைக்கிள் விபத்து!

0
195

யாழ்.வல்லை பாலத்தில் இன்று காலை கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மழை காரணமாக பாலத்தில் வழுக்கும் தன்மை காணப்பட்டமையால் பாலத்தில் பயணித்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதியதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் இன்று காலை தற்கெட்டுஓடிய காரால் நேர்ந்த  அசம்பாவிதம் | Tragedy Happened In Jaffna This Morning

அதேவேளை விபத்தினை ஏற்படுத்திய கார் பாலத்தில் இருந்து விழுந்த போதிலும் சாரதி காயங்கள் இன்றி தப்பியுள்ளார். யாழில் வல்லை மற்றும் கோப்பாய் பாலங்கள் இரும்பில் அமைக்கப்பட்டுள்ளமையால் மழை காலத்தில் பாலங்கள் அதிக விபத்து சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலத்தின் மேல் உள்ள இரும்பு தகரங்களில் உராய்வை அதிகரிக்கும் நோக்குடன் தார் படுக்கைகள் போடப்பட்டாலும் அவை இரும்பு தகரங்களில் ஒட்டிக்கொள்ளாது படையாக கிளம்பி சிறிது காலத்தில் காணாமல் போய்விடும்.

யாழில் இன்று காலை தற்கெட்டுஓடிய காரால் நேர்ந்த  அசம்பாவிதம் | Tragedy Happened In Jaffna This Morning

எனவே குறித்த இரு பாலங்களிலும் இடம்பெறும் விபத்து சம்பவங்களை தடுப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.