இலங்கை – ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இரட்டிப்பாக இந்தியா எதிர்பார்ப்பு!

0
159

ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை அனுமதித்த பின்னர் அடுத்த இரண்டு மாதங்களில் ரஷ்யா மற்றும் இலங்கையுடன் 8-9 பில்லியன் டொலர் மதிப்பிலான இருதரப்பு வர்த்தகத்தை இந்தியா எதிர்பார்க்கிறது என்று இந்தியாவின் வர்த்தக செயலாளர் பி.வி.ஆர். சுப்ரமணியம் (B. V. R. Subrahmanyam) கூறியுள்ளார்.

B. V. R. Subrahmanyam

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மாதம் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை மாற்றத்தக்க ரூபாயில் கொடுப்பனவுகளை செலுத்த அனுமதித்தது.

இது டொலர்களை நம்புவதற்குப் பதிலாக ரஷ்யா மற்றும் தெற்காசிய அண்டை நாடுகளுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதாக அமைந்துள்ளது. ரூபாய் மதிப்பிலான விற்பனை ஒரு பெரிய நன்மையாக அமைந்துள்ளது.

இலங்கை – ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இருமடங்கு எதிர்பார்க்கும் இந்தியா! | Sri Lanka Trade With Russia India Expects

இதன்படி அடுத்த இரண்டு மாதங்களில் ரஷ்யா மற்றும் இலங்கையுடன் 8-9 பில்லியன் டொலர்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி முக்கியமாக மசகு எண்ணெய் ஜூலை மற்றும் பெப்ரவரி இறுதிக்குள் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு உயர்ந்து 15 பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருந்தது.

ஆனால் ரஷ்யாவுடன் அனுமதியளிக்கப்பட்ட பணம் செலுத்தும் முறைமை இல்லாததால் ஏற்றுமதிகள் அதே காலக்கட்டத்தில் 1.34 பில்லியனில் இருந்து 852.22 மில்லியனாகக் குறைந்துள்ளன.

இதேவேளை பொருளாதார நெருக்கடியில் உள்ள இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சமீபத்திய வர்த்தக புள்ளிவிவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.