இலங்கையின் சுற்றுலாத் தூதராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா!

0
481

இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியவை (Sanath Jayasuriya) நியமிக்க சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தீர்மானித்துள்ளார்.

புதிய சுற்றுலா ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நியமனத்தை அறிவிக்கும் சிறப்பு நிகழ்வு இன்று (04-08-2022) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

சனத் ஜயசூரிய உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர். மேலும் அவர் தானாக முன்வந்து இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகளை இலக்காகக் கொண்ட இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகளில் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக கிரிக்கெட் ஜாம்பவான்! யார் தெரியுமா? | Sanath Jayasuriya Tourism Ambassador Of Sri Lanka