242 அடி நீளமுள்ள ‘டோர்டா’ சாண்ட்விச்; அசத்திய சமையல் நிபுணர்கள்!

0
102

242 அடி நீள டோர்டா சாண்ட்விச்சை மெக்சிகோ நாட்டு சமையல் கலை நிபுணர்கள் தயாரித்துள்ளனர்.

மெக்சிகோவின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றான டோர்டா சாண்ட்விச் பிரெட், இறைச்சி, காய்கறிகள் மற்றும் பல்வேறு வகை சாஸ்களால் தயாரிக்கப்படுகிறது.

தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற சமையல் திருவிழாவில் பங்கேற்ற சமையல் கலை வல்லுனர்களால் வெவ்வேறு பிளேவர்களில் தயாரிக்கப்பட்ட இந்த 242 அடி நீள டோர்டா சாண்ட்விச்க்குள் வெறும் 2 நிமிடம் 9 வினாடிகளில் உணவு பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்டு மக்களுக்கு பரிமாறப்பட்டதாக தெரியவந்துள்ளது.