விழுந்த இடத்திலிருந்து மீண்டும் எழ ஆரம்பித்து விட்டோம்! – ஜனாதிபதி

0
119

விழுந்த இடத்திலிருந்து மீண்டும் எழ ஆரம்பித்து விட்டோம் என்கிறார் ஜனாதிபதி. ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றியுள்ளார்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தான் அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி என்றும் அனைவரதும் உரிமைகளையும் பாதுகாப்பதாக உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை இக்கட்டான நிலையில் இருக்கும் போது இந்தியா வழங்கி உதவியையும் ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்தார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கைக்கு உயர்மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும் நீண்ட கால பொருளாதார கொள்கைகளின் ஊடாக 2048 ஆம் ஆண்டு இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இப்போது விழுந்த இடத்திலிருந்து மீண்டும் எழ ஆரம்பித்து விட்டோம் என்றும் குறிப்பாக விவசாயம், எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுக்கு தீர்வு கிடைத்துவிட்டது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க இதன்போது மேலும் தெரிவித்தார்.