கடற்கரையில் பதின்மவயது மாணவ மாணவிகள் உல்லாசம்; 40 பேர் சிக்கினர்!

0
441

மாத்தறை கடற்கரையின் பாழடைந்த பிரதேசத்தில் டிக் டொக் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த 13 வயதான பாடசாலை மாணவ மாணவிகள் நான்கு பேரை பொலிசார் எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நான்கு மாணவ மாணவிகளும் காதலர்களாக அந்த இடத்துக்கு வந்து டிக் டொக் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை அந்த இடத்துக்கு அருகாமையில் இருந்த 16 வயதுக்கு 28 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகள் 40 பேரை மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியக பொறுப்பாளர் திருமதி வருணி கேஷலா கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.