பெங்களூருவில் சிக்கன் கபாப்பில் காரம் இல்லாததால் மனைவியை தாக்கிய கணவன்

0
93

பெங்களூருவில் ‘சிக்கன் கபாப்’பில் காரம் குறைவாக இருந்ததால் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் அவரது மனைவியை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் பார்ப்பப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு அவர் காவல்துறைக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக இந்திய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48). இவரது மனைவி ஷாலினி. இருவரும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். சுரேஷ் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த அவர், ‘சிக்கன் கபாப்’ செய்யும்படி மனைவியிடம் கூறியுள்ளார். அப்போது கபாப்பில் காரம் குறைவாக இருந்ததாகவும் இதனால் கோபமடைந்த சுரேஷ் மனைவியை வீட்டில் இருந்த கத்தியால் குத்தி உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுவதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.