கோட்டாபய வருவதற்கு இது தருணம் அல்ல; ரணில்

0
288

சிங்கப்பூரில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கோட்டாபய நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாகவும் இது அரசியல் பதட்டங்களை தூண்டும் எனவும் வோல் ஸ்ட்ரீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய வருவதற்கு இது உகந்த நேரமல்ல; ரணில் முக்கிய தகவல் | This Is Not An Auspicious Time For Gotabaya

“அவர் திரும்பி வருவதற்கான நேரம் இது என்று நான் நம்பவில்லை,” என்று விக்கிரமசிங்க அந்த ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

அதோடு “அவர் விரைவில் திரும்பி வருவதற்கான எந்த அறிகுறியும் தன்னிடம் இல்லை.” என்றார்.

கோட்டாபய வருவதற்கு இது உகந்த நேரமல்ல; ரணில் முக்கிய தகவல் | This Is Not An Auspicious Time For Gotabaya

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியை அடுத்து வெடித்த மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஜூலை 13 ஆம் திகதி தப்பியோடியதுடன் தனது பதவியில் இருந்தும் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.