களனி பல்கலைக்கழக மாணவர் கடத்தல்!

0
234

களனி பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர் ஒருவர் கடத்தப்பட்டு சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் வீதியில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடத்தப்பட்டவர் களனி பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் குழுத் தலைவரான 4ஆம் ஆண்டு மாணவர் என மாணவர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து குறித்த மாணவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக   மாணவர் கடத்தல் ! | University Student Kidnapping

அதன்பின்னர் சுமார் 3 மணித்தியால விசாரணைகளின் பின்னர் வீதியில் விடப்பட்டதாகவும் மாணவர் சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

அதேசமயம் கடத்தப்பட்ட மாணவரிடம் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ஏனைய மாணவர செயற்பாட்டாளர்கள் தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.