கனடாவில் கணவருக்காக சிறுநீரகத்தை தானம் செய்துள்ள மனைவி

0
529

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கணவனுக்காக, அவரது மனைவி தனது சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார்.

கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்த கணவரை காப்பாற்றும் நோக்கில் மூன்று பிள்ளைகளின் தாயான எமி ஒம்ஸ்டட் என்பவரே இவ்வாறு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளார்.

ஜோர்ஜ் எக்லாஸோஸ் என்பவரே இவ்வாறு சிறுநீரகத்தை தானமாக பெற்றுக் கொண்டுள்ளார்.

ஒன்றாரியோவில் உடல் உறுப்பு தானங்களைப் பெற்றுக் கொள்வதற்காக 14000 பேர் காத்திருப்பதாக இணைய தளமொன்று தெரிவிக்கின்றது.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட ஜோர்ஸிற்கு இருதயக் கோளாறும் ஏற்பட்டது. முதலில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்படி, ஜோர்ஜிற்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் கடந்தாலும் இந்த தம்பதியினர் இடையேயான பிணைப்பு நாளுக்கு நாள் வலுப்பெற்றுள்ளது என சீ.டி.வி தொலைக்காட்சி சேவை தெரிவிக்கின்றது.

உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்படுவதில் காட்டும் தயக்கம் காரணமாக பலர் உயிரிழப்பதாகவும் உறுப்பு தானத்தை தாம் ஊக்குவிப்பதாகவும் ஜோர்ஜின் மனைவி எமி கூறுகின்றார்.

பிள்ளைகள் அவர்களது தந்தையை இழந்து விடக்கூடாது என்பதனால் தாம் சிறுநீரகத்தை தானமாக வழங்கியதாகவும் இருவரும் உடல் நலம் தேறி வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.