இந்தியாவில் பரவும் தக்காளி காய்ச்சல்!

0
441

இந்தியாவில் தற்போது 80 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதுடன் இதன் மூலம் இந்தியாவில் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

தக்காளி காய்ச்சல் என்பது கை, பாதம் மற்றும் வாய் நோய் (HFMD) என அழைக்கப்படுகிறது, இது ஒரு அரிய வைரஸ் நோயாகும், இது உடல் முழுவதும் சொறி மற்றும் கொப்புளங்களை உண்டாக்க கூடியது.

உடலில் தோன்றும் கொப்புளங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு வடிவத்திலும் நிறத்திலும் தக்காளியை ஒத்திருப்பதால், இந்த காய்ச்சல் தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. தக்காளி காய்ச்சலானது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நோய் உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றாலும் மிகப்பெரிய தொற்று நோயாக கருதப்படுகிறது. சிவப்பு கொப்புளங்கள், தடிப்புகள், தோல் எரிச்சல் மற்றும் நீரிழப்பு இது தவிர, அதிக காய்ச்சல், உடல் வலி, மூட்டு வீக்கம், சோர்வு, வயிற்றுப் பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி, இருமல், சளி போன்ற பிரச்சனைகளையும் ஆகியவை தக்காளி காய்ச்சலுக்கான சில பொதுவான அறிகுறிகள் ஆகும்.

சிக்குன் குனியாவை ஒத்திருக்கும் தக்காளி காய்ச்சல் குழந்தைகளின் தோலில் சிவப்பு நிற கொப்புளங்கள், சொறி போன்றவற்றை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

எனவே குழந்தைகளை கண்காணிக்கும் படியும், கூடுமான வரையில் தனிமைப்படுத்தி வைத்திருக்கும் படியும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

தக்காளி காய்ச்சலை தவிர்ப்பதற்கான சிறந்த வழியாக வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நபரை தொடும் பொருட்களைத் தொட வேண்டாம் மற்றும் அவர்களின் உடைகள், பாத்திரங்கள் மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.