கோட்டாவை தடுத்த குடிவரவு அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்; எம்.பி டயனா கமகே!

0
406

டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியானால் சஜித் பிரேமதாச பிரதமரானால் அரசாங்கம் நன்றாக இருக்குமா! பரிதாபமாக இருக்குமல்லவா” என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே நேற்று நாடாமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

அண்மைய நாட்களில் நாட்டில் இடம்பெற்ற விடயங்களை குறிப்பிட விரும்புவதாக தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் நடத்தை குறித்து அவர் குறிப்பாக கவனம் செலுத்தினார்.

கோட்டாவை தடுத்த குடிவரவு அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்; எம்.பி! | Immigration Officials Who Blocked The Quota Mp

அது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

முன்னாள் ஜனாதிபதிக்கு அப்போதைய ஜனாதிபதி என்ற வகையில் இராஜதந்திர உரிமைகள் இருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது அவரது கடவுச்சீட்டை முத்திரையிடாத குடிவரவு அதிகாரிகள் உடனடியாக இனங்காணப்பட்டு உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் இத்தகைய நடத்தைக்கான காரணங்களை அறிந்து கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.