இலங்கையால் இந்தியாவுக்கு சீனா அச்சுறுத்தல்!

0
626

இலங்கை வரவுள்ளன சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பலினால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சைனாஸ் யுவான்வாங்-5 என்ற சீன கப்பல் வரவுள்ளது.

இந்த கப்பல் ஆகஸ்ட் 17ஆம் திகதி வரை துறைமுகத்தில் நங்கூரமிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்கப்பல் இந்தியப் பெருங்கடல் மண்டலத்தின் வடமேற்குப் பகுதியில் செயற்கைக்கோள் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனாவின் சைனாஸ் யுவான்வாங் – 5 விண்வெளி கண்காணிப்பு கப்பல் விண்வெளி தரை தகவல் பரிமாற்றத்தை செயல்படுத்தி வருகின்றது.

அத்துடன் செயற்கைக்கோள்களின் சுற்றுப்பாதை நிர்ணயம் மற்றும் அணுகலுக்கு முக்கியமான தகவல் ஆதரவை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.

அதேவேளை கொழும்பில் இருந்து சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் அதிக வட்டியுடனான சீன கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் சீனாவிற்கான கடனை திருப்பிச் செலுத்த முடியாமையால் 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.