இன்று எம்.பி.யாக பதவியேற்கிறார் இளையராஜா!

0
107

இசையமைப்பாளர் இளையராஜா இன்று மாநிலங்களை நியமன எம்.பி.யாக பதவியேற்றுக் கொள்கிறார்.

இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோர் மாநிலங்களவை நியமன எம்.பிக்களாக அண்மையில் நியமிக்கப்பட்டனர்.

கடந்த திங்களன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது நியமன எம்பியாக தேர்வு செய்யப்பட்டோர் மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் அன்றைய தினம் இளையராஜா பதவியேற்கவில்லை.

அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றதால், இளையராஜாவால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் இளையராஜா இன்று மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளார். இதற்காக அவர் இன்று தில்லி புறப்பட்டு சென்றார்.

தில்லி விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.