பெற்றோலை வாய்மூலம் வெளியேற்றல் உயிராபத்து!

0
562

வாகனங்களிலிருந்து பெற்றோலை உறிஞ்சி வெளியேற்ற முயற்சிக்கும்போது நுரையீரலுக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டு என  கராப்பிட்டி போதனா மருத்துவமனையில் விசேட மருத்துவர் கபிலானி வித்தானாராச்சி தெரிவித்துள்ளார்.

கராப்பிட்டி மருத்துவமனையில் எக்மோ இயந்திர உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 30 வயதுடைய  ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

புகைப்பழக்கம் மற்றும் வேறு நோய்களின்றி குறித்த நபருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பெற்றோல் வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்று ஒரு வாகனத்திலிருந்து இன்னுமொரு வாகனத்துக்கு வாய் மூலம் எரிபொருளை பெறும் நடவடிக்கை மேற்கொண்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நுரையீரல் பாதிப்புக்கு இதுவே என மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

பெற்றோலில் உள்ள இரசாயனத்தால் நுரையீடல் பாதிக்கப்படலாம். சிறு பக்றீரியா அல்லது வைரஸ் உடலினுள் சென்றால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவடையும்போது இதுபோன்ற நிலைமை உருவாகலாம்– என்றார்.