‘டீல் அரசியல்’ நடத்தாமல் ரணில் உடனடியாக பதவி விலகவேண்டும் – ஹர்ஷ டி சில்வா

0
589

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு மேலும் நாட்டை நெருக்கடி நிலைக்கு தள்ளி விடாமல் உடனடியாக பதவி விலகி சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு இடமளிக்க வேண்டும். மேலும் வேட்புமனுவுக்கு அழைப்பு விடுத்து புதிய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் விரும்பும், கோரிக்கை மற்றும் நாட்டின் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்ட தீர்மானங்களுக்கு அமைவாக தற்போது நாம் செயல்பட வேண்டும்.

அதைவிடுத்து தற்போது ஜனாதிபதி விலகிய பின்னர் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்பார் என்பதை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

அவர்கள் கோரிக்கை விடுப்பது கோட்டா – ரணில் இருவரும் பதவி விலக வேண்டும்.

அதற்கமைவாக, திகதி குறிப்பிடப்பட்டு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யலாம்.

ஆனால் அரசாங்கத்தினர் இராணுவத்தை மற்றும் அவர்களின் துப்பாக்கியை கொண்டு மக்களின் கோரிக்கைகளையும் அபிலாஷைகளையும் இல்லாது செய்ய பார்க்கிறார்கள்.

தற்போது பிரதமர் ரணில் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்று நாட்டை மேலும் மோசமான நிலைக்கு தள்ளுவதற்கு முயற்சிக்கிறார்.

நாம் முப்படைகளுக்கு கோரிக்கை விடுக்கிறோம். துப்பாக்கி மூலம் போராட்டகாரர்கள் அடக்குவதற்கு முயற்ச்சிக்க வேண்டாம். அவர்களை சுடுவதற்கு அல்லது தாக்குதல் நடத்துவதற்கு முப்படையினருக்கு அதிகாரம் இல்லை.

பிரதமர் ரணில் நாட்டில் நிலவும் மிக நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு மேலும் இந்நிலையை உக்கிரமடை செய்யாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் மேலும்

நாட்டு மக்கள் கோரும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளிக்க வேண்டும்.

‘டீல் அரசியல்’; நடத்துவதற்கு இது பொருத்தமான நேரமல்ல .

நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் செயல்பட வேண்டும்.

இந்நிலையில், நாட்டில் சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நாடுகள், மற்றும் கடன் வழங்குனருடனும் பல முக்கியமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற தருணத்தில் நாட்டில் தற்போது அரசியல் குழப்பங்கள் காரணமாக ஜனநாயக மீறப்படுமானல் அவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்காமல் போகும்.

அதன் காரணமாக நாடும் மேலும் மோசமான நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும். இதை கவனத்தில் கொண்டு உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.