எரிபொருள் நிலையத்தில் அடிவாங்கிய பொலிஸ்காரர்!

0
463

மத்துகம ஐஓசி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருள் விநியோகத்தின் போது ஏற்பட்ட குழப்பம் காரணமாக நபர் ஒருவரால் தாக்கப்பட்ட மத்துகம குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் தலையில் காயம் காரணமாக மத்துகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தடியால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இராணுவத்தின் 12ஆவது பொறியியலாளர் படைப்பிரிவின் படையினரால் அமைதியற்ற நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.