எம்மைத் தாக்க முற்பட்டால் சர்வதேச அளவில் கேவலப்படுவர்! போராட்டத்திற்கு மத்தியில் செயற்படும் சதி குழுவினர்

0
531

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்களை அடக்குமுறையால் கட்டுப்படுத்த இவர்கள் நினைத்தால் சர்வதேச அளவில் கேவலப்படுவர் என போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என அறிவித்து நடத்தப்பட்ட மக்கள் போராட்டம் பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

பதவி விலகும் அரசியல் பிரமுகர்கள்

போராட்டங்களின் விளைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், பதவி விலகல் கடிதத்தில் அவர் இன்றைய தினம் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பின்னர் தான் பதவி விலகுவதாக இதற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகுவதாக நேற்று அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவித்திருந்தார். அத்துடன் மிகப்பெரும் பலம் பொருந்திய கட்சியாக காண்பிக்கப்பட்ட பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தும் பலர் வெளியேறிச் செல்கின்றனர்.

போராட்டத்திற்கு மத்தியில் செயற்படும் சதி குழுவினர்

இந்த சமயத்தில் ஜனாதிபதி செயலகம் , ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் இன்றும் அங்கே தங்கியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இந்த அரசாங்கத்திற்கு எதிரான தமது எதிர்ப்புக்களை பொதுமக்கள் இன்னமும் வெளியிட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள பொருட்கள் சேதமாக்கப்பட்டதற்கும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதற்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக தனிப்பட்ட குழு ஒன்று சதி நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பணத்திற்காக இவ்வாறு வேலை செய்பவர்கள் பலர் இங்குள்ளனர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுளுள்ளனர். (Video)