
சுவிட்சர்லாந்தில் ரெஸ்டுரன்ட் ஒன்றில் உணவு உட்கொள்ளச் செல்லும் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகின்றது. முழுமையாக உணவை உட்கொள்ளத் தவறும் வாடிக்கையாளர்கள் மீது இவ்வாறு அபராதம் விதிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தின் அராகு (Aargau) மாகாணத்திலுள்ள Baden நகரில் அமைந்துள்ள Casanova Restaurant ஒன்றில் உணவு உட்கொண்டு தட்டில் உணவை விரயமாக்குவோருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்படுகின்றது.
இந்தியாவில் பிறந்து வளர்ந்த சுல்மான் கௌரி (Sulman Ghauri) என்பவரே இந்த ஹோட்டலின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிய சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் உணவு பஞ்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் உணவை விரயமாக்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹோட்டல் உரிமையாளர் இந்த புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளார்.
இந்தியாவில் உணவு விலை மதிப்பற்றது எனவும் தாம் உணவை விரயமாக்குவதில்லை எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது ஹோட்டலில் 20 பிராங்குகளுக்கு புபே அடிப்படையில் விரும்பிய அளவில் உணவை உட்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
எனினும், தட்டில் உணவை இட்டு அதனை உட்கொள்ளாது விரயமாக்கினால் அவர்களுக்கு கட்டணத்துடன் 5 பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவை விரயமாக்குவதனை தடுக்கும் தமது இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கஹ்ரி தெரிவிக்கின்றார்.
எனினும் இவ் உணவக உரிமையாளரான சுல்மான் கௌரி (Sulman Ghauri) இதுவரை யாரையும் அபராதம் செலுத்துமாறு வற்புறுத்தியதில்லை எனவும் கூறப்படுகின்றது.
