ஜனாதிபதி மாளிகைக்குள் சிக்கிய கோடிக்கணக்கான ரூபாய்!

0
466

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை நேற்று முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மாளிகைக்குள் இருந்த பெருந்தொகை பணத்தை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை போராட்டக்காரர்கள் எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

நேற்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியிடம் கையளித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட உண்மைகளை ஆராய்ந்த பின்னர் நில நிலைமையை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இத்தகவலை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.