யாழ்.காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல்..! ஒருவர் படுகாயம்..

0
114

யாழ்.காரைநகரில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருவருக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 08 மணியளவில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது.

இந்த மோதலி் ஒருவர் காயமடைந்த நிலையில் மற்றையவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை சேர்ந்தவரே காயமடைந்த நிலையில் காரைநகர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, 

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.