ரஷ்ய அழகிகளுடன் ஊர் சுற்றும் மஹிந்தவின் நெருங்கிய நண்பர்

0
258

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருக்கும் தொழிலாதிபருமான உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) ரஷ்ய அழகிகளுடன் ஊர் சுற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் உதயங்க வீரதுங்க கடந்த 2020 பெப்ரவரி 13ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

மிக நீண்ட காலமாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த உதயங்க வீரதுங்க ஓமானில் இருந்து, கடந்த 2020பெப்ரவரி 13ஆம் திகதி இரவு நாடு திரும்பினார்.

மஹிந்தவின் நெருங்கிய உறவினர் தற்போது ரஷ்ய உல்லாசப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் ஒருவராக இருக்கிறார்.