பிரான்ஸில் அவசர அவசரமாக திருமணம் செய்து கொள்ளும் இளைஞர் – யுவதிகள்!

0
269

பிரான்ஸில் ஒரே வருடத்தில் 300,000 திருமணங்கள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னர் எப்போதும் இல்லாத அளவில் இளைஞர் – யுவதிகள் அவசர அவசரமாக திருமணம் செய்துக்கொள்கின்றனர்.

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் இந்த திருமணங்கள் இடம்பெற உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகள் மிகவும் நெருக்கடியான ஆண்டுகளாக அமைந்திருந்த நிலையில் கொவிட் 19 தொற்று உள்ளிட்ட ஏராளான காரணிகள் இயல்பு வாழ்க்கையை பாதித்திருந்தது.

திருமண நிகழ்வுகளையும் இது பாதித்திருந்தது. பல ஆயிரம் திருமணங்கள் பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே வரும் ஆண்டில் 300,000 இற்கும் மேற்பட்ட திருமணங்கள் இடம்பெற உள்ளதாக அறிய முடிகிறது.

பிரான்ஸில் சாதாரணமாக வருடம் ஒன்றுக்கு 220,000 திருமணங்கள் வரையே இடம்பெற்று வந்த நிலையில் முன்னர் எப்போதும் இல்லாத அளவு தற்போது 300,000 திருமணங்கள் இடம்பெற உள்ளதாக அறிய முடிகிறது.

அதேவேளை, இவ்வருடத்தில் 250,000 திருமணங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.