நேரலையில் தூங்கிவழிந்த புடின்; உடல் நிலை குறித்த சந்தேகம்!

0
190

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஷ்ய ஜனாதிபதி (Vladimir Putin) புடின் நிகழ்ச்சியின் போதே தூங்கி விழுந்ததைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து அவரது உடல் நிலை குறித்து அச்சம் உருவாகியுள்ளது.

சமீப காலமாக குறிப்பாக உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே (Vladimir Putin) புடினுடைய உடல் நிலை குறித்த செய்திகள் பல உலாவரத் துவங்கின. (Vladimir Putin) புடினுக்கு புற்றுநோய் என்றும் அவருக்கு பார்க்கின்ஸன் பிரச்சினை இருப்பதாகவும் செய்திகள் வெளியாக, வெளியான சில வீடியோக்களில் கை கால்கள் நடுநடுங்கியபடி (Vladimir Putin) புடின் காணப்படும் காட்சிகளும் வெளியாகி சந்தேகத்தை அதிகப்படுத்தின.

இந்நிலையில், சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான செர்ஜி ஷோய்குவுடன் (Vladimir Putin) புடின் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதில், கிழக்கு உக்ரைனிலுள்ள லுஹான்ஸ்க் பகுதியை விடுவித்ததற்காக தனது படையினரை பாராட்டும் (Vladimir Putin) புடின் இனி அவர்கள் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு தங்கள் போர்த்திறனை அதிகரித்துக்கொள்ளலாம் என கூறும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

வழக்கமாக வீராவேசமாக வீரர்களிடையே உரையாற்றும் புடின் இந்தக் கூட்டத்தில் உற்சாகமின்றி கடமைக்கு உரையாற்றுவது போல காணப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தான் கூட்டத்தின் நடுவிலேயே (Vladimir Putin) புடின் தூங்கி விழுவது போல காணப்படும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

அந்த புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து (Vladimir Putin) புடினுடைய உடல் நிலை மேலும் மோசமாகியிருக்கலாமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.