அமெரிக்க சுதந்திரதின விழாவை இரத்தக்களரியாக்கிய இளைஞன் !

0
182

அமெரிக்க சுதந்திரதின விழா அணிவகுப்பின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் குறைந்தது 31 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காலை 10 மணிக்கு கொண்டாட்டங்கள் தொடங்கிய 15 நிமிடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆனால் சம்பவம் நடந்து சுமார் 10 மணி நேரத்திற்குப் பிறகு பொலிசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

22 வயதான Robert E Crimo என்பவர் பாடகர் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மட்டுமின்றி சமூகத்திற்கு எதிரான கருத்துகள் கொண்ட பாடல்களையும் அவர் பதிவேற்றி வந்துள்ளார்.

இத்தாலிய அமெரிக்கரான Robert E Crimo ஹைலேண்ட் பார்க், இல்லினாய்ஸ் பகுதியில் வசித்து வந்துள்ளார். துப்பாக்கி குண்டுக்கு பலியான ஆறு பேர்களில் ஒருவர் சிறார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் டசின் கணக்கான மக்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆறு பேர் இன்னும் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.