மீண்டும் நான் வருவேன்; மஹிந்த அறிவித்த அதிரடி!

0
305

உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் நேற்று முதல் தடவையாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச தனது மீள் அரசியல் பிரவேசம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இந்த கூட்டம் நடைபெற்றது.

மே 09ம் திகதி நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்து அரசியல் நடவடிக்கையில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

எனினும் மீண்டும் தாம் அரசியல் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அவர் நேற்று தெரிவித்துள்ளார். இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்திற்கு வந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

அத்துடன் மகிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அண்மையில் வெளியான செய்திகள் குறித்தும் வினவியுள்ளனர். அதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்க்ஷ,

“நானும் வீட்டிலிருந்து அந்த செய்திகளைப் பார்த்தேன். அவை அப்பட்டமான பொய்கள். நான் நலமாக உள்ளேன். அரசியல் பணிகள் வழக்கம் போல் தொடங்குவேன். எதற்கும் பயப்பட வேண்டாம் என கூறியுள்ளார்.