பிரான்சிலிருந்து வந்த பெண்களிடம் அத்துமீறிய 18 வயது இளைஞன்!

0
107

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு பெண்கள் இருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த 28 வயது மற்றும் 31 வயதுடைய பெண்கள் இருவர் கடற்கரையோரமாக சென்றுள்ளனர்.

இதன்போது உள்வீதியூடாக வந்த இளைஞன் இரு யுவதிகளையும் துஷ்பிரயோகம் செய்ததாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டுக்கு வந்த வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்! | Foreign Woman Who Came To The Country

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சஹ்ரான் என்ற இளைஞரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களும் சட்டவைத்திய நிபுணர் அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.