காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொடூரமாக கொன்ற மனைவி – மகன்!

0
321

பதுளை பகுதியில் மனைவியும் மகனும் சேர்ந்து மண்வெட்டியால் தந்தையை தாக்கிக் கொலை செய்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் பதுளை – கஹட்டருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் 33 வயதான மனைவியும் 17 வயதான மகனையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகனின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரைத் துன்புறுத்தியதே கணவரின் கொலைக்கான காரணம் எனச் சந்தேக நபரான மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொடூரமாக கென்ற மனைவி - மகன்! | Wife Son Killed Father Objected To Love Badulla

மேலும், மனைவி கடந்த மே மாதம் 31ஆம் திகதி இந்தக் கொலையை செய்து மகனுடன் சேர்ந்து சடலத்தைக் காட்டில் வீசிவிட்டு பொலிஸ் நிலையத்தில் தனது கணவனைக் காணவில்லை என முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.