எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு!

0
519

நாட்டின் எரிவாயு ஒப்பந்தத்தை தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனம் ரத்து செய்ததால் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு எரிவாயு விற்பனை செய்வது தொடர்பாக ஓமான் வர்த்தக நிறுவனத்துக்கும் தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துக்கும் இடையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சியாமின் அனைத்து எரிகளும் ஒரு மெற்றிக் தொன் எரிவாயுவை 96 டொலருக்கு வழங்க விருப்பம் தெரிவித்த நிலையில் ஓமான் ரேபிங் நிறுவனம் 129 டொருக்கு விலையை நிர்ணயித்தது.

எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு! | Possibility Of Increasing The Price Of Gas Again

இதனால் சியாம் எரிவாயு நிறுவனத்துக்கு எரிவாயு ஒப்பந்தத்தை மே மாதம் 3 ஆம் திகதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது, ஆனால் அதேநேரத்தில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் ஓமான் ரேடிங் நிறுவனத்திடம் விடப்பட்டது.

இந்த நிலையிலே எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு! | Possibility Of Increasing The Price Of Gas Again

இதேவேளை சியாம் எரிவாயு நிறுவனத்தின் எரிவாயு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் அரச அதிகாரி ஒருவரின் மகன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.