வெளிநாட்டில் இருந்து இலங்கை வருவதற்கு தயாராகும் சைக்கிள் குவியல்!

0
346

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றன. நாட்டு மக்கள் எரிபொருள் வாங்க எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருப்பதை காணமுடிகின்றது.

மேலும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலைகளை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக மக்கள் சைக்கிளை வாங்க நாட்டில் உள்ள சைக்கிள் கடைகளை நோக்கி சென்றவாறு உள்ளனர்.

இந்த நிலையில் வெளிநாடொன்றில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய சைக்கிள்கள் குவிந்த வண்ணம் உள்ள காணொளி ஒன்று வைரலாகி வருகின்றன.