சிலாபம் நீதிமன்ற பஸ் நிறுத்தத்துக்கு அருகில் பெருமளவு பயணிகள் நேற்று மாலை பஸ்ஸுக்காக காத்திருந்தனர். சிலாபத்தில் இருந்து புத்தளம் வீதிக்கு பயணிக்கும் பல பயணிகள் அங்கிருந்தனர்.
நீண்டநேரமாக பயணிகள் காத்திருந்தும் பஸ் ஒன்றும் தென்படாத நிலையில் திடீரென ஒரு லொறி அங்கு வந்தது. இதன்போது பஸ் தரிப்பிடத்தில் தங்கியிருந்த சாரதியும் உதவியாளரும் பயணிகளிடம், லொறி புத்தளம் மதுரங்குளியை நோக்கிச் செல்வதாகவும், மதுரங்குளிக்குச் செல்பவர்கள் அதில் ஏறுமாறும் கூறியுள்ளனர்.
“காரணமே இல்லாமல் போகும் லொறி. அப்படி போகும் ஆட்கள் இருந்தால்.. காசு வேண்டாம் ஏறுங்கள்” எனக் கூறினர். அதன் பின் பஸ்ஸுக்காக காத்திருந்த பலர் லொறியில் ஏறிய நிலையில் கைக் குழந்தை ஒன்றை வைத்திருந்த பெண்ணுக்கு முன் இருக்கையையும் வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் தவிக்கும் இந்த நேரத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் மக்களின் சிரங்களை கருத்தில் கொள்ளாது உள்ள நிலையில், மக்களுக்கு உதவ மக்கள் மட்டுமே இருக்கிறார்கள் என பயணி ஒருவர் சமூக வலைத்தளத்தில் தனது ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார்.