கனடாவில் தாய் மற்றும் மகள்கள் கத்தியால் குத்தி படுகொலை

0
274

திங்கட்கிழமை கனடா தலைநகர் Ottawaவில் உள்ள Anoka Street என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் ஒரு பெண்ணையும் அவரது இரண்டு மகள்களையும் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கத்தியால் குத்தப்பட்டவர்களில் உயிரிழந்த ஒருவர் Anne-Marie Ready (50). அவர் Global Affairs Canadaவின் கரீபியன் பிரிவு வர்த்தக ஆணையராக 2017 முதல் பணியாற்றி வந்திருக்கிறார்.

அவருடன் கத்தியால் குத்தப்பட்ட அவரது மகள்களில் ஒருவரான Jasmine Ready (15)யும் உயிரிழந்துவிட்டார். அவரது மற்றொரு மகளுடைய பெயர் Catherine Ready (19), அவரும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பொலிசார் கத்தியால் குத்தியவரை சுடும்போது Catherine மீதும் குண்டு பாய அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர்களுடைய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கனடாவில் தாயும் மகள்களும் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்: புகைப்படங்கள் வெளியாகின... | Mother And Daughters Stabbed To Death In Canada

அத்துடன், அவர்களைக் கத்தியால் குத்திய இளைஞர் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அவரது பெயர் Joshua Graves (21). கத்தியால் குத்தப்பட்ட Anne-Marieயின் மகள்களில் ஒருவர் மீது Joshua ஆசைப்பட்டிருக்கிறார். அவரை தொடர்புகொள்ளக்கூடாது என Joshuaக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அவர் Catherineஐக் கத்தியால் குத்தும்போது பொலிசார் கத்தியைக் கீழே போடும்படி அவரை எச்சரிக்க அவர் எச்சரிக்கையை சட்டை செய்யாமல் தொடர்ந்து Catherineஐக் கத்தியால் குத்த பொலிசார் அவரை சுட்டுக் கொன்றார்கள். வழக்கு விசாரணை தொடர்கிறது.

Anne-Marie குடும்பத்தினர் Guyana நாட்டு பின்னணி கொண்டவர்கள் ஆவர்.  

கனடாவில் தாயும் மகள்களும் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்: புகைப்படங்கள் வெளியாகின... | Mother And Daughters Stabbed To Death In Canada