போராட்டக்காரர்கள் எந்த சட்டத்தை மீறினார்கள்; கனேடிய தூதர் அதிருப்தி

0
564

டெஸ்ட் போட்டியின் போது காலி கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றுவதற்கு இராணுவத்தை பயன்படுத்தியமை தொடர்பில் இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் (David McKinnon) அதிருப்தி வெளியிட்டுள்ளார் .

கிரிக்கெட் இலங்கையில் மிகப்பெரிய விடயம் என்பது எனக்கு தெரியும் இராணுவத்தினரை பயன்படுத்தவேண்டிய அளவிற்கு இது தேசிய பாதுகாப்பு விடயமா எனவும் தூதுவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்ப்பாட்டகாரர்கள் எந்த சட்டத்தை மீறினார்கள்;   கனடா தூதுவர்  அதிருப்தி | Protesters Did Not Break Any Law Question

அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்கள் எந்த சட்டத்தினை மீறினார்கள் எனவும் இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் (David McKinnon) கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்ப்பாட்டகாரர்கள் எந்த சட்டத்தை மீறினார்கள்;   கனடா தூதுவர்  அதிருப்தி | Protesters Did Not Break Any Law Question

அதேவேளை துடுப்பாட்ட வீரர்களின் கவனம் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அகற்றப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிசாந்த பிரேமரட்ண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.