கோட்டாபய பதவி விலகினால் அது மக்களுக்கு உதவும்! அறிவித்தது கத்தார்

0
762

தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டபாய ராஜபக்ஷ வெளியேறிய பின்னரே எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்குவதற்கான அடிப்படையை அமைக்கலாம் என்று கட்டார் அரச தலைவர் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எரிபொருளைத் தேடிச் சென்ற இலங்கைக் குழுவிடம் கட்டார் அரச தலைவர் சூசகமாக இதனைத் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கமைய கோவிட் நோயால் உயிரிழந்த இஸ்லாமிய மக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு உலகின் 57 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்புடன் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை விடுத்தது.

அந்த கோரிக்கையை பொருட்படுத்தாமல் நெகிழ்ச்சியான கலந்துரையாடலுக்கு இடமளிக்காமல் தகனம் செய்தமை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் இராஜதந்திர எதிர்ப்பு வெளிப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கட்டார் தொண்டு நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக கருதி தடை செய்து அந்த அமைப்பிடம் உதவி பெற்று கல்வி நிறுவனம் நடத்தி சென்ற ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் நடந்து கொண்ட முறை ஆகியவைவே இந்த எதிர்ப்பிற்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையிலேயே கட்டார் தொண்டு நிறுவனம் மீதான தடையை அரசாங்கம் அவசரமாக நீக்க உள்ளதாக எரிசக்தி அமைச்சர் கட்டாரில் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபய பதவி விலகினால் மக்களுக்கு அதி முக்கிய உதவி! அறிவித்த சர்வதேச நாடு | Is Sri Lanka In An Economic Crisis