அவுஸ்திரேலிய பிரதமர் பெயரை மறந்தா கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

0
225

நேட்டோ உச்சி மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பல விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albaneses) ஆகியோரின் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இருவருடைய சந்திப்பின் போது உரையாற்றிய ட்ரூடோ (Justin Trudeau) அவுஸ்திரேலிய பிரதமரின் பெயரை ஒமுறை கூட கூறவில்லை.

எனினும் “சிறந்த தலைவர், மரியாதைக்குரியவர், நண்பர்” என்றெல்லாம் அவுஸ்திரேலிய பிரதமரை கூறியவர் அவருடைய பெயரை கூறவில்லை.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அவுஸ்திரேலிய பிரதமரின் பெயரை மறந்து விட்டதாக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.