இந்தியாவில் குழந்தைக்கு பல் துலக்காமல் முத்தமிட்டதால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கொன்ற கணவன்

0
301

இந்திய கேரளா மாநிலத்தில் பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு ஒன்றைரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் காலை எழுந்ததும் அவினாஷ் குழந்தையை கொஞ்சுவது வழக்கம்.

இன்றும் அதுபோல் குழந்தைக்கு முத்தம் கொடுத்து கொஞ்சியுள்ளார். இதை பார்த்த தீபிகா பல் துலக்காமல் குழந்தைக்கு ஏன் முத்தம் கொடுத்தீர்கள் என கேட்டுள்ளார்.

இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ஆத்தரமடைந்த அவினாஷ் மனைவியை கத்தியால் குத்திள்ளார். இதில் படுகாயமடைந்த தீபிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவினாசை கைது செய்துள்ள நிலையில் இச்சம்பவம் அங்கு பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.