போரில் காயமடைந்த ரஷ்ய வீரர்களுக்கு தங்க பதக்கங்கள்!

0
211

உக்ரைன் போரில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்க பதக்கங்களை வழங்கும் புகைப்படத்தை ரஷ்ய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.

இதன்போது மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் செர்ஜி ஷோய்கு (Sergei Shoigu) அவர்களுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.