பிரிட்டனில் தாய்நாட்டிற்காக இளைஞனும் யுவதியும் மேற்கொண்ட நெகிழ்ச்சியான நடவடிக்கை

0
78

இலங்கையில் பல மாதங்களாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியா மக்களை இலங்கைக்கு சுற்றுலா பயணம் செய்ய வைக்கும் தீவிர முயற்சியில் இலங்கையை சேர்ந்த இளைஞனும் யுவதி ஒருவரும் முன்னெடுத்து வருகின்றனர்.

கொரோனா தொற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கை பொருளாதார நெருக்கடியாலும் கடுமைமியாக பாதிக்கப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மற்றும் டொலர் பற்றாக்குறையால் மக்கள் பல்வேறு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான , ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களால் இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.

 இந்த நிலையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தேவையான டொலர்களை திரட்டும் நோக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டமொன்றை பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை யுவதியொருவரும் இளைஞனும் முன்னெடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகம் மற்றும் வெம்ப்லி மைதானத்தை சுற்றியுள்ள மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுவரொட்டி ஒன்றை காட்சிப்படுத்துவதில் இருவரும் தீவிரமாக ஈட்டு வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் கடினமான காலகட்டத்தை இலங்கை கடந்து வர இந்த நேரத்தில், இலங்கைக்கு விஜயம் செய்து நாட்டுக்கான டொலர்களை திரட்டுவதற்கு உதவுமாறு சுவரொட்டியில் குறிப்பிட்டு அவர்கள் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதேசமயம் பிரித்தானிய மக்கள் அதைப் படித்து சாதகமான பதிலைக் கொடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், பிரித்தானியாவில் உள்ள அனைத்து இளைஞர்களும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதில் சேருமாறு அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.